/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கல்வராயன்மலையில் கலெக்டர் நேரில் ஆய்வுகல்வராயன்மலையில் கலெக்டர் நேரில் ஆய்வு
கல்வராயன்மலையில் கலெக்டர் நேரில் ஆய்வு
கல்வராயன்மலையில் கலெக்டர் நேரில் ஆய்வு
கல்வராயன்மலையில் கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : அக் 13, 2011 03:42 AM
சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த கல்வராயன் மலையில் ஓட்டு எண்ணும் மையத்தை
கலெக்டர் மணிமேகலை பார்வையிட்டார்.கல்வராயன்மலை ஒன்றிய பகுதியில் பதிவாகும்
ஓட்டுக்கள் அங்குள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் எண்ணப்படுகிறது.
ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் மணி மேகலை நேரில் ஆய்வு செய்தார். பின்னர்
வெள்ளிமலை ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் ஓட்டுப் பெட்டிகள் வைத்துள்ள அறையை
பார்வையிட்டார்.பின்னர் கல்வராயன்மலை பகுதியில் வாக்காளர் களுக்கு பூத்
சிலிப் வழங்கும் பணியை ஆய்வு செய்தார். கச்சிராபாளையம் கோமுகி அணையின்
ஷெட்டர்கள் இயங்குவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது
கள்ளக்குறிச்சி ஆர். டி.ஓ., உமாபதி, சங்கராபுரம் தாசில்தார் கோகுலபத்மநாபன்
உடனிருந்தனர்.


