Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சாதனைகள் தொடர வாய்ப்பு மணிகண்டன் வேண்டுகோள்

சாதனைகள் தொடர வாய்ப்பு மணிகண்டன் வேண்டுகோள்

சாதனைகள் தொடர வாய்ப்பு மணிகண்டன் வேண்டுகோள்

சாதனைகள் தொடர வாய்ப்பு மணிகண்டன் வேண்டுகோள்

ADDED : அக் 13, 2011 09:54 PM


Google News

தேனி : தேனி நகராட்சி 8வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் மணிகண்டன் தனது சாதனைகளை சொல்லி, தொடர வாய்ப்பு தாருங்கள் என கேட்டு ஓட்டுக்களை சேகரித்து வருகிறார்.

தேனி 8வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக தென்னை மர சின்னத்தில் போட்டியிடுபவர் வக்கீல் ஜெ.டி. மணிகண்டன், 33. அரசியல் குடும்பத்தை சேர்ந்த இவர், தற்போது கவுன்சிலராக உள்ளார். மக்களிடம் தனது சாதனைகளை சொல்லி, சாதனை தொடர வாய்ப்பளியுங்கள் என மக்களிடம் கேட்டு வருகிறார்.



மணிகண்டன் மக்களிடம் பேசியதாவது: அல்லிநகரம் பஜார் தெருவில் 2 லட்சம் ரூபாய் செலவில் தார்ரோடு அமைத்துள்ளேன். வீரப்ப அய்யனார் மலைக்கோயிலுக்கு 60 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் ரோடு, சாக்கடை வசதி செய்து கொடுத்துள்ளேன். மாரி முதலாவது தெரு, உப்புனூத்து தெரு, வெள்ளையன்தெரு, மாரி 1வது குறுக்கு தெரு, வீரப்ப அய்யனார் கோயில் சன்னதி குறுக்கு தெருக்களில் சிமென்ட் ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணி முடிந்ததும் எல்லா இடங்களிலும் ரோடு அமைத்து தருவேன். வைகை அணையில் இருந்து குடிநீர் எடுத்து முறையாக சப்ளை செய்வேன். (98655-76686) எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us