ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார்
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார்
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார்
ADDED : செப் 04, 2011 09:18 PM
கோவை:பத்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாக, வீடியோ ஆதாரத்துடன், அ.தி.மு.க., பிரமுகர் மீதான புகாரால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.போத்தனூரைச் சேர்ந்த நகை வியாபாரி கிருஷ்ணன்,52; வெளி மாநிலங்களில் இருந்து நகைகளை வாங்கி, கோவை நகைக்கடைளுக்கு வினியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, வீடியோ ஆதாரத்தைக் காட்டி, கோவை அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளார்.கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும், 2 உதவி கமிஷனர்களின் பெயரையும், தன்னை மிரட்டிய அ.தி.மு.க., பிரமுகரின் பெயரையும் கமிஷனரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், வீடியோ ஆதாரத்தைத் தரவும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


