ADDED : அக் 11, 2011 01:37 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மகளை, தந்தை கர்ப்பமாக்கிய வழக்கில்,
இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.
திண்டுக்கல்
ராமையன்பட்டியை சேர்ந்த பெயின்டர் சசிக்குமார், 38. இவர், 15 வயது மகள்
மாதவியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கர்ப்பமாக்கினார். இதன்படி, சசிக்குமார்
கைது செய்யப்பட்டு, ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தந்தை,
மகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய, மாஜிஸ்திரேட் காயத்திரி உத்தரவிட்டார்.


