/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுற்றுலா வேன் விபத்து ஒருவர் பலி: 12 பேர் காயம்சுற்றுலா வேன் விபத்து ஒருவர் பலி: 12 பேர் காயம்
சுற்றுலா வேன் விபத்து ஒருவர் பலி: 12 பேர் காயம்
சுற்றுலா வேன் விபத்து ஒருவர் பலி: 12 பேர் காயம்
சுற்றுலா வேன் விபத்து ஒருவர் பலி: 12 பேர் காயம்
ADDED : அக் 09, 2011 12:29 AM
பொள்ளாச்சி : புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் வந்த சுற்றுலா வேன், வால்பாறை அருகே விபத்துக்குள்ளானதில், டிரைவர் பலியானார்; 12 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், 15 பேர், நேற்று முன்தினம் இரவு டிஎன்- 21 ஏடபிள்யு-4257 என்ற வேனில், பொள் ளாச் சிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று, ஆழியாறு அணையை பார்வையிட்டு, வால்பாறை சென்ற போது, குரங்கு நீர்வீழ்ச்சி அருகே, எதிர்பாராவிதமாக வேன் கவிழ்ந்தது. டிரைவர் சுதாகரன், 27. சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த ஜெயமூர்த்தி, 50, மாசிலன், 49, கோதண்டபாணி, 43, ஆனந்தன், 49, பக்கிரி, 49, பாண்டுரங்கன், 50, அய்யனார், 50, தெய்வநாயகம், 45, ராஜேந்திரன், 48, சந்திரசேகர், 47, ஜெயபாலன், 47, கிளீனர் கவியரசன், 23. ஆகியோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ரத்தின குமார், சிசுபாலன், ஆதண்டன், ஜெய்கொடி ஆகியோர் காயமின்றி தப்பினர். ஆழியாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


