Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பாதாள சாக்கடை திட்டம்: காங்., கட்சிக்கு பிரசார யுக்தி

பாதாள சாக்கடை திட்டம்: காங்., கட்சிக்கு பிரசார யுக்தி

பாதாள சாக்கடை திட்டம்: காங்., கட்சிக்கு பிரசார யுக்தி

பாதாள சாக்கடை திட்டம்: காங்., கட்சிக்கு பிரசார யுக்தி

ADDED : அக் 12, 2011 01:18 AM


Google News
கடலூர் : கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்ட பிரச்னையை காங்., கட்சி பிரசார யுக்தியாக பயன்படுத்தி வருகின்றனர்.

கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கி 5 ஆண்டுகளாகி விட்ட நிலையில் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் கடலூரில் தேர்தல் பிரசாரம் செய்த ஜெ., பாதாள சாக்கடைத் திட்டத்தை விமர்சனம் செய்தார். இதன் விளைவாக தி.மு.க., படுதோல்வியடைந்தது. கடலூர் நகர மக்களின் கடும்கோபத்தை உணர்ந்த அமைச்சர் சம்பத் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி மஞ்சகுப்பம் நேதாஜி ரோட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஜூன் 27ம் தேதிக்குள்ளும், மொத்த பணியும் செப்டம்பர் மாத்திற்குள் கண்டிப்பாக முடிக்கப்பட்டு விடும் என உறுதியளித்தார். ஆனால் சொன்னபடி நிறைவேற்றவில்லை. மாறாக நேதாஜி, புதுப்பாளையம் சாலை யானை பிடிக்கும் பள்ளமானது. இதனால் தினம் தினம் விபத்துக்கள் அரங்கேறின. இதை சரி செய்ய தற்காலிக நடவடிக்கையாக நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஒரு பிடி மண்ணைக்கூட போடவில்லை. இதனால் நகரவாசிகள் மீண்டும் எரிச்சலடைந்துள்ளனர். இதையே காங்., தனது தேர்தல் பிரசார யுக்தியாக பயன்படுத்தத் துவங்கியுள்ளது. காங்., வேட்பாளர் சந்திரசேகரன் தனது பிரசாரத்தில், இதுவரை தலைவர் பதவி வகித்து வந்த திராவிடக்கட்சிகள் மக்களுக்கு எதையுமே செய்யவில்லை. இனி வரும்காலங்களில் கூட எதையும் செய்ய மாட்டார்கள். சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு பதிலாக கப்பல்கள்தான் செல்லும் என ஆதங்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசார யுக்தி திருப்பத்தை ஏற்படுத்தும் என காங்., தொண்டர்கள் நம்பியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us