ADDED : செப் 16, 2011 12:26 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று நான்கு ரோட்டிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். அவைத்தலைவர் நாகராஜன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, போக்குவரத்து பிரிவு பொதுசெயலாளர் பரமசிவம், நகர செயலாளர் குருநாதன், முன்னாள் நகராட்சி சேர்மன் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, பூக்கடை முனுசாமி, இலக்கிய அணி தகடூர் விஜயன், கவுன்சிலர் பூக்கடை ரவி, பேரவை பெருமாள், பாசறை மாவட்ட செயலாளர் சங்கர், மீனவரணி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முல்லைவேந்தன் தலைமையில் தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். அவைத்தலைவர் கந்தசாமி, நகர பொறுப்பாளர் சிட்டி முருகேசன், யூனியன் சேர்மன் தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் மனோகரன், இலக்கிய அணி தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கூட்டுறவு பண்டக சாலை முன் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி தலைமையில் அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கினர். மாநில செயலாளர் சிங்கராயன், துரைகண்ணன், ஜோதி, முன்னாள் கவுன்சிலர் பாலகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் பாலாஜி, குமரேசன், கூட்டுறவு பண்டக சாலை நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* காரிமங்கலம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் அண்ணாதுரை திருவுருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. நகர செயலாளர் காந்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் முனுசாமி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
* பாலக்கோடு ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் கருணாகரன், நகர செயலாளர் சங்கர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், முன்னாள் நகர செயலாளர்கள் ராஜா, கோவிந்தசாமி, கவுன்சிலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் பாலக்கோடு பிரிவு ரோட்டில் இருந்து அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். ஒன்றிய செயலாளர் அர்ச்சுணன், நகர செயலாளர் வாசுதேவன், ஒன்றிய துணை செயலாளர் சுந்தரேசன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணைசெயலாளர் எர்ரஅள்ளி ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், இளைஞரணி குப்புசாமி, முன்னாள் சேர்மன் பெரியவேடி, பாசறை ஒன்றிய செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் சேர்மன் விவேகானந்தன், அவைத்தலைவர் வெங்கடேசன், யூனியன் சேர்மன் ஆதிமகேந்திரன், துணைசேர்மன் சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணி, டேம்ரோடு செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


