இந்தியா தன் சொந்த காலில் நிற்கவேண்டும்: பிரதமர்
இந்தியா தன் சொந்த காலில் நிற்கவேண்டும்: பிரதமர்
இந்தியா தன் சொந்த காலில் நிற்கவேண்டும்: பிரதமர்
ADDED : அக் 11, 2011 04:00 PM
புதுடில்லி: சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிரமங்கள் இருப்பதால், இந்தியா தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த உயர் ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் பேசிய அவர், சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் மோசமடைந்துள்ளன. பயங்கரவாத அமைப்புகள் சிறந்த நெட்வொர்க்குகளுடன் இயங்குவதோடு, மிகவும் கொடூரமானதாகவும் செயல்படுகின்றன. இதற்கேற்ப நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் இந்தியா தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்றும் பேசினார்.


