ADDED : அக் 12, 2011 02:19 AM
மேட்டூர்:கொளத்தூர் அருகே, மலையடிவாரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட
சாயப்பட்டறையை வருவாய்துறை, சுற்றுசூழல் நலவாரிய அதிகாரிகள் முன்னிலையில்
இடித்து அகற்றப்பட்டது.கொளத்தூர் ஒன்றியம், கருங்கல்லூர், கணவாய்க்காடு
பகுதியில் வேலுமணி என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது.
மலையடிவார
பகுதியில் உள்ள நிலத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு சாயப்பட்டறை
அமைக்கப்பட்டது.சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால்
நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மேட்டூர்
ஆர்.டி.ஓ., சூர்யபிரகாஷிடம் புகார் செய்தனர்.நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ.,
சூர்யபிரகாஷ், சுற்றுசூழல் நல உதவி பொறியாளர் பாண்டியன். தாசில்தார்
ஜெயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் சட்ட விரோதமாக இயங்கிய
சாயப்பட்டறையை இடித்து அகற்றப்பட்டது.


