Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலவசங்கள் தருவதாக கையெழுத்துவாங்கிய அ.தி.மு.க.,. பிரமுகர் கைது

இலவசங்கள் தருவதாக கையெழுத்துவாங்கிய அ.தி.மு.க.,. பிரமுகர் கைது

இலவசங்கள் தருவதாக கையெழுத்துவாங்கிய அ.தி.மு.க.,. பிரமுகர் கைது

இலவசங்கள் தருவதாக கையெழுத்துவாங்கிய அ.தி.மு.க.,. பிரமுகர் கைது

ADDED : அக் 12, 2011 02:19 AM


Google News
சேலம்:தமிழக அரசின் இலவசங்களை பெற்றுத் தருவதாக கூறி, பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய, அ.தி.மு.க.,பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம், 58வது வார்டில் அ.தி.மு.க., பகுதிச் செயலாளர் சண்முகம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த கறிக்கடை பழனி, சுயேட்சையாக போட்டியிடுகிறார். தி.மு.க.,சார்பில் மணி, பா.ம.க., சார்பில் சோடா சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதில் சுயேட்சையாக போட்டியிடும் கறிக்கடை பழனிக்கும், அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகத்துக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சண்முகத்துக்கு ஆதரவாக சேலம் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கன் விட்டல் தெரு அ.தி.மு.க., பிரமுகர் சிவசண்முகம், தமிழக அரசின் இலவசங்களான, மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் ஆகியவற்றுக்கான விண்ணப்ங்களை வழங்கி உள்ளார்.

அத்துடன் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் கார்டு ஜெராக்ஸ்களையும் பெற்றுள்ளார். தனது சார்பில் வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி உள்ளார். அப்போது அ.தி.மு.க., வேட்பாளருக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பேன் என உறுதி மொழி வாங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தே.மு.தி.க.,வினர், அந்த பகுதி தேர்தல் அலுவலர்கள் ஆறுமுகம், குமார் ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், சிவசண்முகத்தை கையும் களவுளாக பிடித்தனர். இதை அடுத்து அவர்கள் சிவசண்முகத்தை செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us