ADDED : செப் 15, 2011 03:39 AM
திருக்கோவிலூர்:பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது
செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த முதலூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி
மகன் ஜம்புலிங்கம், 30.
அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகள் மாலினி, 25.
இவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். மாலினியை காதலித்த ஜம்புலிங்கம்
ஆத்திரமடைந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி மாலினியை
கத்தியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மாலினி முண்டியம்பாக்கம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் திருக்கோவிலூர்
போலீசார் வழக்கு பதிந்து ஜம்புலிங்கத்தை கைது செய்தனர்.


