குழந்தையின் நோயை தடுக்கும் தாய்ப்பால் : சர்வதேச தாய்ப்பால் வாரம்
குழந்தையின் நோயை தடுக்கும் தாய்ப்பால் : சர்வதேச தாய்ப்பால் வாரம்
குழந்தையின் நோயை தடுக்கும் தாய்ப்பால் : சர்வதேச தாய்ப்பால் வாரம்
ADDED : ஆக 01, 2011 01:50 AM

தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம், சர்வதேச தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் இது 170 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. மேலைநாடுகளில் பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர விரும்புவதில்லை என்பது வேதனைக்குரியது.
குழந்தைக்கு தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கு உகந்தது என்பதே உண்மை. குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்கலாம் என்கின்றனர் டாக்டர்கள். குறிப்பாக முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. குழந்தைக்கு தேவையான புரதங்களும் அதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 2 வயது வரை கொடுக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
மூன்றில் ஒரு பங்கு
உலகில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்களில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மூன்றில் ஒரு பங்கு, முறையாக தாய்ப்பால் கொடுக்கப்படாததால் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கிறது. இந்த வகை குழந்தைககள், நோய்வாய்ப்படும் வாய்ப்பும் அதிகம்.
என்ன நன்மை
முறையாக தாய்ப்பால் தருவதால், குழந்தை மரணங்கள் தவிர்க்கப்படுகின்றன. குழந்தையின் மூளை மற்றும் நுண்ணறிவு வளர்ச்சி அதிரிக்கிறது. குழந்தை பிறப்புக்கு பின், தாய்க்கு ஏற்படும் ரத்தசோகை தடுக்கப்படுகிறது. அடுத்த கர்ப்ப காலத்தை தாமதப்படுத்துகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். தாய்மார்களுக்கு மார்பு மற்றும் கர்ப்பப்பை கேன்சர் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான பிணைப்பு, தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது.