/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் வெயில் உக்கிரம் அதிகரிப்புதர்மபுரியில் வெயில் உக்கிரம் அதிகரிப்பு
தர்மபுரியில் வெயில் உக்கிரம் அதிகரிப்பு
தர்மபுரியில் வெயில் உக்கிரம் அதிகரிப்பு
தர்மபுரியில் வெயில் உக்கிரம் அதிகரிப்பு
ADDED : செப் 27, 2011 11:40 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் உக்கிரம் கோடை
காலத்தை மிஞ்சும் அளவில் வெளுத்து கட்டுவதால், மக்கள் பெரும்
அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெப்ப மண்டல பகுதியான தர்மபுரி மாவட்டத்தில்
ஆண்டுதோறும் கோடை காலங்களில் வெயில் உக்கிரம் அதிகம் இருக்கும். இந்தாண்டு
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம்
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்
ஆதாரங்களில் நீர் சேமிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து செப்டம்பர் இறுதி
வரையில் தென்மேற்கு பருவ மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
எதிர்பார்த்த அளவில் மழையில்லை. மாறாக கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில்
வெயில் உக்கிரம் கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வாட்டி எடுத்து வருகிறது.
வெயில் உக்கிரம் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் புளுக்கம்
அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம்
இரவு மழைக்கான அறிகுறிகள் இருந்த போதும், லேசான சாரல் மழை பெய்து
ஏமாற்றியது. நேற்று காலையில் இருந்து வெயில் உக்கிரம் வழக்கம் போல்
வாட்டியது. மாலை 4 மணிக்கு மேல் வெயில் உக்கிரம் திடீரென தணிந்து மழைக்கான
அறிகுறி இருந்த போதும் தர்மபுரியில் மழை இல்லை. மாலை நேரத்துக்கு பின்
குளிர்ந்த காற்று வீசியதால், காலையில் அடித்து வெயில் உக்கிரம் சற்று
தணிந்தது. வெயில் உக்கிரம் அதிகரித்துள்ளதால், நீர் ஆதாரங்களில் நீர்
சேமிப்பு குறைந்துள்ளது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு
போதிய நீர் இல்லாமல் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கலக்கம்
அடைந்துள்ளனர்.


