Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/போட்டோவுடன் பூத் சிலிப் பெரம்பலூர் கலெக்டர் தகவல்

போட்டோவுடன் பூத் சிலிப் பெரம்பலூர் கலெக்டர் தகவல்

போட்டோவுடன் பூத் சிலிப் பெரம்பலூர் கலெக்டர் தகவல்

போட்டோவுடன் பூத் சிலிப் பெரம்பலூர் கலெக்டர் தகவல்

ADDED : அக் 12, 2011 02:30 AM


Google News
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியில் உள்ளாட்சித்தேர்தலையொட்டி ஃபோட்டோவுடன் பூத் சிலிப் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஃபோட்டோ வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக அவர்களது பெயர், முகவரி மற்றும் ஃபோட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வாக்காளர்களுக்கு அவர்களுடைய வீட்டுக்கே நேரில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியில் வி.ஏ.ஓ., தலையாரி, அங்கன்வாடி மற்றும் சத்துணவுத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அரசு அலுவலர்களின் கண்காணிப்பில் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் அக்., 7ம் தேதி முதலும், பெரம்பலூர் நகராட்சியில் அக்., 8ம் தேதி முதலும் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் ஃபோட்டோவுடன் கூடிய பூத் சிலிப்பை பயன்படுத்தி ஓட்டுப்போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக அன்னை பருவதம்மா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, எளம்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us