மோகனூர்: பரமக்குடியில் நடந்த கலவரத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டதை
கண்டித்தும், இந்த சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்டு வரும் தமிழக அரசை
கண்டித்தும், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கண்டன
ஆர்ப்பாட்டம், மோகனூரில் நடந்தது.ஒன்றியச் செயலாளர் வாசுதேவன் தலைமை
வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.கட்சி நிர்வாகிகள் சரவணன்,
ரஞ்சித், ஜெபமாலை, ராஜா, சுந்தரம், ஆரோன் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


