இரு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு
இரு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு
இரு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு
ADDED : செப் 14, 2011 12:14 AM

சென்னை :''செங்கல்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கூறினார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை சீரமைத்து, 6,000 ரூபாயாக இருந்த பேறுகால நிதியுதவி, 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக, 596 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.* கிராமப்புற பெண்கள் அனைவருக்கும் இலவச, 'சானிட்டரி நாப்கின்' வழங்கும் புது திட்டம், நடப்பாண்டில் 46 கோடி ரூபாய் செலவில் அமல்படுத்தப்படும்.* '108' இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம், 3 கோடியே, 60 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில், பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் துவங்கப்படும்.* வீடுதோறும், பிறவிக் குறைபாடு உள்ளவர்களை, சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்குரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.* மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கிராம சுகாதார செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கிட, தேனி, நாமக்கல், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில், மூன்று துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்படும். 15 கோடி ரூபாய் செலவில், இவை ஏற்படுத்தப்படும்.* செங்கல்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* பதிவு செய்துள்ள 9,563 பாரம்பரிய இந்திய மருத்துவமுறை வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும், 500 ரூபாய் மாத ஓய்வூதியம், இனி 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.