/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஊராட்சித் தலைவர் இருவர் போட்டியின்றி தேர்வுஊராட்சித் தலைவர் இருவர் போட்டியின்றி தேர்வு
ஊராட்சித் தலைவர் இருவர் போட்டியின்றி தேர்வு
ஊராட்சித் தலைவர் இருவர் போட்டியின்றி தேர்வு
ஊராட்சித் தலைவர் இருவர் போட்டியின்றி தேர்வு
ADDED : அக் 05, 2011 12:50 AM
திருத்தணி : திருத்தணி ஒன்றியத்தில், இரு ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருத்தணி ஒன்றியத்தில், 12 ஒன்றிய கவுன்சிலர்கள், 27 ஊராட்சித் தலைவர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர், 219 வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில், 25 ஊராட்சித் தலைவர் பதவிக்கு மட்டும் போட்டியுள்ளது. கே.ஜி.கண்டிகை ஊராட்சித் தலைவராக டி.முனிரத்தினம், பீரகுப்பம் ஊராட்சித் தலைவராக ரேவதி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க., போட்டியில்லை: மொத்தமுள்ள, 12 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், வீரகநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மட்டும் தி.மு.க., போட்டியிடவில்லை. மற்ற அனைத்து முக்கிய கட்சியினர் இங்கு போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


