ADDED : அக் 10, 2011 03:10 AM
ஓசூர்: ஓசூர் அருகே கடன் தொல்லையால், தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ஓசூர் அருகே சின்னஎலசகிரி பாலவிநாயகர் தெருவை சேர்ந்தவர் மணி.
இவர் சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் பெற்றுள்ளார். அவர்களுக்கு, கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், மனமுடைந்த மணி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


