/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அக். 14 க்குள் தபால் ஓட்டுச்சீட்டு வினியோகம் : தேர்தல் கமிஷன் உத்தரவுஅக். 14 க்குள் தபால் ஓட்டுச்சீட்டு வினியோகம் : தேர்தல் கமிஷன் உத்தரவு
அக். 14 க்குள் தபால் ஓட்டுச்சீட்டு வினியோகம் : தேர்தல் கமிஷன் உத்தரவு
அக். 14 க்குள் தபால் ஓட்டுச்சீட்டு வினியோகம் : தேர்தல் கமிஷன் உத்தரவு
அக். 14 க்குள் தபால் ஓட்டுச்சீட்டு வினியோகம் : தேர்தல் கமிஷன் உத்தரவு
ADDED : அக் 08, 2011 10:50 PM
பழநி : தபால் ஓட்டுச்சீட்டுகளை, அக்., 14 க்குள் வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, தபால் ஓட்டு பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான வேண்டுகோள் கடிதம், தேர்தல் பயிற்சி வகுப்புகளின்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. முழுமையாக நிரப்பப்பட்ட படிவங்களை, உரிய பி.டி.ஓ., நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களுக்கான ஓட்டுச்சீட்டு படிவங்களை, அதிகாரிகள் அக்., 14 க்குள் வினியோகிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நேரடியாகப் பெறும் ஓட்டுச்சீட்டுகளில், உரிய முறையில் ஓட்டளித்து அங்குள்ள பெட்டிகளில் சேர்க்கலாம். தவறும் பட்சத்தில், பணிக்காக நியமிக்கப்படும் தொகுதியின் தேர்தல் அலுவலருக்கு தபால் ஓட்டுச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடிக்கு தலைமை அலுவலர் மூலம் இவை உரிய பகுதிக்கு அனுப்பப்படும்.


