/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்டத்தில் 4 நாட்களில் ரூ.3.98 கோடிக்கு மது விற்பனைகரூர் மாவட்டத்தில் 4 நாட்களில் ரூ.3.98 கோடிக்கு மது விற்பனை
கரூர் மாவட்டத்தில் 4 நாட்களில் ரூ.3.98 கோடிக்கு மது விற்பனை
கரூர் மாவட்டத்தில் 4 நாட்களில் ரூ.3.98 கோடிக்கு மது விற்பனை
கரூர் மாவட்டத்தில் 4 நாட்களில் ரூ.3.98 கோடிக்கு மது விற்பனை
ADDED : அக் 10, 2011 03:11 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் நான்கு நாட்களில் மூன்று கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பில் மதுபான விற்பனை நடந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் 112 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
வழக்கமாக நாள் ஒன்றுக்கு 50 லட்ச ரூபாய் வரை விற்பனையாகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதலாக விற்பனையாகும்.தொழில்வளம் மிகுந்த கரூரில் மாத தொடக்கத்தில் மது விற்பனை உச்சத்தை தொடும். ஆனால் கடந்த 2 ம் தேதி ஞாயிறு கிழமையாக இருந்தும் கூட, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து இரண்டு நாட்களில் ஆயுத பூஜை திருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் அன்று தொழில் நிறுவனங்களுக்கு பூஜை போட்ட பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது.இதனால் ஆயுத பூஜையன்று, ஒரே நாளில் 2,298 மதுபான பெட்டிளும், 2,020 பீர்பாட்டில் பெட்டிகள், 99 லட்சத்து 60 ஆயிரத்து 90 ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்றது. கடந்த 1, ம் தேதி மற்றும் 3,4,5 ம் தேதிகளில் மொத்தமாக மூன்று கோடியே 98 லட்சத்து 48 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் மதுபான வகைகள் விற்பனையாகியுள்ளது.


