நொறுங்கி விழுந்தது மிக் - 21 ரக விமானம்
நொறுங்கி விழுந்தது மிக் - 21 ரக விமானம்
நொறுங்கி விழுந்தது மிக் - 21 ரக விமானம்
ADDED : அக் 07, 2011 10:48 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில், மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக பைலட் உயிர் தப்பினார். கடந்த 60ம் ஆண்டு முதல், மிக் போர் விமானங்கள், விமானப்படையில் இயங்கி வருகின்றன. இதுவரை, 976 விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பாதி எண்ணிக்கையிலான விமானங்கள் விபத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன. எனவே, வரும் 2017ம் ஆண்டு முதல் இந்த விமானங்களை விமானப் படையிலிருந்து நீக்கி விட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில், மிக்-21 ரக விமானத்தில், அமீத் என்ற பைலட் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். திடீரென இந்த விமானம், உத்தர்லாய் விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பாராசூட் மூலம் குதித்து, பைலட் உயிர் தப்பினார்.


