/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளி அருகில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கைபள்ளி அருகில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
பள்ளி அருகில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
பள்ளி அருகில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
பள்ளி அருகில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
ADDED : அக் 04, 2011 01:02 AM
மடத்துக்குளம் : மாணவர்கள் பயன்படும் வகையில் பள்ளிக்கு அருகில் பஸ்கள் நின்று செல்லவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கணியூர் வெங்கிட கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் 2,200 மாணவர்கள் படித்து வருகின்றனர். பல ஊர்களில் இருந்து வரும் மாணவர்கள் கணியூர் பஸ் ஸ்டாண்டு வழியாக பள்ளிக்கு வந்து திரும்புகின்றனர். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானம் வழியாக பஸ் ஸ்டாண்டு செல்கின்றனர். இதர வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு கிழக்கு பகுதியில் இருந்து தெருக்கள் வழியாகவும், விளையாட்டு மைதானம் வழியாகவும், ஒரு கி.மீ., தூரம் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. அனைத்து மாணவர்களும் பஸ் ஸ்டாண்டில் சேர்வதால் நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. உடுமலையில் இருந்து கடத்தூருக்கு செல்லும் 7,7ஏ,2ஏ,12,மற்றும் இதர தனியார் பஸ்கள் அனைத்தும் கணியூர் வெங்கிட கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வழியாக செல்கிறது. ஜோதி கோவில்- கடத்தூர் இணைப்பு சாலை வழியாக கடத்தூர் செல்லும் பஸ்கள் வெங்கிட கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி முன்புறம் நின்று சென்றால் கடத்தூர், குருவன் வலசு, புதூர், தாமரைப்பாடி, பாறையூர், தாந்தோனி, சோழமாதேவி, கழுகரை வயலூர் வழித்தட மாணவர்கள் பயனடைவர். பெற்றோர் கூறுகையில், 'பள்ளிக்கு அருகில் பஸ் நின்று சென்றால் பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படுவதோடு மாணவர்களுக்கு சிரமமும் குறையும். இதற்கு போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


