ADDED : ஆக 21, 2011 02:38 AM
ப.வேலூர்: ப.வேலூர் அருகே இளம்பெண் ஒருவர் மாயமானது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து, தேடிவருகின்றனர்.
ப.வேலூர் அடுத்த நெட்டையாம்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணி மகள் சுமதி (20). அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த, 10 நாட்களுக்கு முன் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள், மகளின் தோழியர் வீடுகளுக்கு சென்று தேடினர். எங்கும் காணவில்லை. இது குறித்து ப.வேலூர் போலீஸில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.


