கடலூர் மகிளா கோர்ட் நீதிபதி ஓய்வு பெறும் நாளில் "சஸ்பெண்ட்'
கடலூர் மகிளா கோர்ட் நீதிபதி ஓய்வு பெறும் நாளில் "சஸ்பெண்ட்'
கடலூர் மகிளா கோர்ட் நீதிபதி ஓய்வு பெறும் நாளில் "சஸ்பெண்ட்'
ADDED : ஆக 01, 2011 01:16 AM
கடலூர் : கடலூர் மகிளா கோர்ட் நீதிபதி அசோகன், பணி ஓய்வு பெறும் நாளான நேற்று, திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர் அசோகன். இவர், நேற்று மாலையுடன் பணி ஓய்வு பெற இருந்தார். அதையொட்டி, கடந்த 29ம் தேதி, கோர்ட் ஊழியர்கள் சார்பில், அவருக்குப் பாராட்டு விழா நடந்தது. பார் கவுன்சில் சார்பில் நேற்று, பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி அசோகனை, 'சஸ்பெண்ட்' செய்து சென்னை ஐகோர்ட் பதிவாளரின் உத்தரவு, நேற்று அதிகாலை கடலூர் மாவட்ட நீதிபதி ருத்ராபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த,'சஸ்பெண்ட்' உத்தரவை நேற்று காலை நீதிபதி அசோகனிடம், அவரது வீட்டில் கோர்ட் ஊழியர்கள் வழங்கினர். இவர் சென்னையில் பணிபுரிந்த போது, பதவியை தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றதாக வந்த புகாரின்படி,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சென்னை பூந்தமல்லி, கடலூர் விரைவு கோர்ட் மற்றும் மகிளா கோர்ட்டுகளில், பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அசோகன், பணி ஓய்வுபெறும் நாளில் திடீரென,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருப்பது, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.