/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு கல்லூரி அமைக்க ஒரு லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்அரசு கல்லூரி அமைக்க ஒரு லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்
அரசு கல்லூரி அமைக்க ஒரு லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்
அரசு கல்லூரி அமைக்க ஒரு லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்
அரசு கல்லூரி அமைக்க ஒரு லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்
ADDED : ஜூலை 19, 2011 09:32 PM
பொள்ளாச்சி : 'பொள்ளாச்சியில், அரசு கலை கல்லூரி அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று ஒரு லட்சம் தபால்களை முதல்வருக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படும்' என, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அரசு கல்லூரி அமைக்க வலியுறுத்தி முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான கூட்டம் வேட்டைக்காரன்புதூரில் நடந்தது.இதில், பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி சமவெளிப்பகுதி, கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட நெகமம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்கல்வி தொடர வேண்டுமானால், கோவை, உடுமலை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வசதி இல்லை. இதனால், இம்மாணவர்களின் கல்லூரி கனவு கலைந்து போகும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க பொள்ளாச்சியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்து பெறவுள்ள தபால் அட்டைகளை முதல்வருக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படவுள்ளது. வரும் ஆக., 28ம் தேதி ஆனைமலையில் நடைபயணம் துவங்கவுள்ளது. அங்கிருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை சென்று மாவட்ட கலெக்டரிடமும், கல்வித்துறை அதிகாரிகளிடமும் மனு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் பாபு, தாலுகா செயலாளர் பரமசிவம், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


