சிறைக்காவலர்கள் மீது கலெக்டரிடம் புகார்
சிறைக்காவலர்கள் மீது கலெக்டரிடம் புகார்
சிறைக்காவலர்கள் மீது கலெக்டரிடம் புகார்
ADDED : அக் 12, 2011 10:45 PM
கோவை : கைதிகளின் குடும்பத்தாரிடம் தரக்குறைவாக நடந்ததாக, கோவை மத்திய சிறைக்காவலர்கள் மீது, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை, உக்கடம் பிலால் எஸ்டேட்டை சேர்ந்த ஜீனத், ஜி.எம்.நகரை சேர்ந்த லைலா ஆகியோர் கொடுத்த புகார் மனு விவரம்: கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் எங்கள் குடும்பத்தினரை, கடந்த, 11ம் தேதி சந்திக்கச் சென்றபோது, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்கள் இருவர், எங்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதுடன், மன ரீதியாக துன்புறுத்தினர். சம்பந்தப்பட்ட இரு பெண் காவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவின் நகல், ஐகோர்ட் தலைமை நீதிபதி, உள்துறை செயலர், மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், மாவட்ட நீதிபதி, சிறைத்துறை தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


