/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அரசு மூலம் "108' ஆம்புலன்ஸ் சேவை நடத்த நெல்லையில் தொழிலாளர்கள் வலியுறுத்தல்அரசு மூலம் "108' ஆம்புலன்ஸ் சேவை நடத்த நெல்லையில் தொழிலாளர்கள் வலியுறுத்தல்
அரசு மூலம் "108' ஆம்புலன்ஸ் சேவை நடத்த நெல்லையில் தொழிலாளர்கள் வலியுறுத்தல்
அரசு மூலம் "108' ஆம்புலன்ஸ் சேவை நடத்த நெல்லையில் தொழிலாளர்கள் வலியுறுத்தல்
அரசு மூலம் "108' ஆம்புலன்ஸ் சேவை நடத்த நெல்லையில் தொழிலாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 19, 2011 01:28 AM
திருநெல்வேலி : அரசு மூலம் '108' ஆம்புலன்ஸ் சேவையை நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.நெல்லையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இதில் இ.எம்.ஆர்.ஐ 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:குஜராத் போன்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல் மாதம் 10 ஆரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.
மாதம் தோறும் சம்பளத்துடன் அகவிலைப்படி சேர்த்தும், தனியாக மருத்துவப் படியும் வழங்க வேண்டும். தினமும் 8 மணி நேரம் வேலை நிர்ணயம் செய்ய வேண்டும்.எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைகள் முறையாக இ.எஸ்.ஐ. பி.எப் நிறுவனங்களில் செலுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையையும் அரசு ஏற்று நடத்த வேண்டும். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


