Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் 590 பதட்டமான பூத்கள் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் 590 பதட்டமான பூத்கள் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் 590 பதட்டமான பூத்கள் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் 590 பதட்டமான பூத்கள் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ADDED : அக் 08, 2011 02:08 AM


Google News
மதுரை : உள்ளாட்சி தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில், மதுரையில் 590 பூத்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டன.

இப்பகுதிகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கூடுதல் பாதுகாப்பிற்கு 5 கம்பெனி போலீசார் பயன்படுத்தப்படவுள்ளனர்.மதுரை மாநகராட்சிக்கு அக்.,17லிலும், புறநகர் பகுதிகளுக்கு அக்.,19லிலும் தேர்தல் நடக்கிறது. மாநகராட்சியில் 100 வார்டுகளில் 72 நகர் போலீஸ் எல்லையில் வருகிறது. மொத்த பூத்கள் 794. இதில் 120 பூத் பெண்களுக்குரியன. 219 பூத்கள் பதட்டமானவை. இப்பகுதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து வர எஸ்.ஐ., மற்றும் இரு போலீசாரை கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் 20 குழுக்கள் வலம் வரும். இவர்கள் இன்ஸ்பெக்டர்கள் சுகுமார்(மண்டலம் 1), முருகதாஸ்( மண்டலம் 2), சங்கு(மண்டலம் 3), வெங்கடேஷ் (மண்டலம் 4) தலைமையில் செயல்படுவார்கள். பிரச்னைக்குரிய பகுதிகளில் பூத்திலிருந்து 200 மீட்டரில் ஒரு எஸ்.ஐ., மற்றும் ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்படுகிறார். தவிர, 62 முக்கிய இடங்களில் எஸ்.ஐ., தலைமையில் 4 போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவர். 10 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. தவிர, கூடுதல் பாதுகாப்பிற்கு இரு கம்பெனி போலீசார் வரவழைக்கப்படவுள்ளனர். நகரில் நேற்று முன் தினம் வரை அ.தி.மு.க., மீது 8, தி.மு.க., 13, தே.மு.தி.க., 5, ம.தி.மு.க., 3, சுயே., ஒன்று என மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். புறநகரில் 2491 பூத்களில் 371 பதட்டமானவை. 114 மிக பதட்டமானவை. இங்கு மேற்குறிப்பிட்டபடி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பூத்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் முதற்கட்டமாக மூன்று பட்டாலியன் போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். தவிர, நகர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும், 200 முன்னாள் ராணுவத்தினர், 30 தீயணைப்பு வீரர்கள், 34 ஓய்வு பெற்ற போலீசார், 104 ஊர்க்காவல் படையினர். 100 என்.சி.சி., மாணவர்களும் பயன்படுத்தப்படவுள்ளனர். நேற்று முன் தினம் வரை 526 பேர் மீது 55 வழக்குகள் பதிவு செய்து, 462 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us