/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சுகாதாரத்தைக் காப்பேன் : விஸ்வநத்தம் வேட்பாளர்சுகாதாரத்தைக் காப்பேன் : விஸ்வநத்தம் வேட்பாளர்
சுகாதாரத்தைக் காப்பேன் : விஸ்வநத்தம் வேட்பாளர்
சுகாதாரத்தைக் காப்பேன் : விஸ்வநத்தம் வேட்பாளர்
சுகாதாரத்தைக் காப்பேன் : விஸ்வநத்தம் வேட்பாளர்
ADDED : அக் 08, 2011 11:24 PM
சிவகாசி : ''சுகாதாரத்தைக் காப்பேன் ,'' என, விஸ்வநத்தம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிடும் கே.வி.கே.சித்ரா கூறினார்.
ஓட்டு சேகரித்த அவர் பேசியதாவது: கடந்த பத்து வருடங்களாக இப்பகுதியில் தெருக்களில் உள்ள சாலைகளை சரியாக சீரமைக்கவில்லை.இதனால் குண்டும் குழியுமாக உள்ள தெருக்களில் மழைநீர் கழிவு நீர் போல் தேங்கி நிற்கிறது. கொசுக்கள், தொற்று நோயை ஏற்படுத்தும் கிரிமிகள், தேங்கி உள்ள கழிவு நீரில் பெருகி ,சுகாததார சீர் கேட்டை ஏற்படுத்துகிறது. என்னை தேர்ந்தெடுத்தால் அனைத்து தெருக்களிலும் சிமென்ட் சாலை அமைக்கப்படும். வாறுகால் வசதி இல்லாத பகுதிகளுக்கு வாறுகால் வசதி செய்து கொடுப்பேன். வாறுகால் மற்றும் தெருக்களை சரியாக சுத்தம் செய்து சுகாதாரத்தைக் காப்பேன். கோடையிலும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார். கே.வி. கந்தசாமி உடன் சென்றார்.


