Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/வெனிசுலாவில் 2 ஆயிரம் கைதிகள் விடுதலை

வெனிசுலாவில் 2 ஆயிரம் கைதிகள் விடுதலை

வெனிசுலாவில் 2 ஆயிரம் கைதிகள் விடுதலை

வெனிசுலாவில் 2 ஆயிரம் கைதிகள் விடுதலை

ADDED : ஆக 06, 2011 06:31 AM


Google News
கார்கசஸ்: வெனிசுலா நாட்டில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் பேரி்ல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை உடனடியாக விடுவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் இரு வேறு சிறைகளி்ல் கைதிகளிடையே நடந்த கலவரத்தில் 22 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததே இந்த கலவரத்திற்கு காரணம் என தெரியவந்தது. மேலும் அந்நாட்டின் மனித உரிமை அமைப்பைச் சமூக ஆர்வலர்கள் குழுவினர் பல்வேறு சிறைகளில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.இவற்றில் 13 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க கூடிய கைதிகளில், 50 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.தற்போது சிறிய குற்றங்களுக்காக சிறையில் உள்ள பல்வேறு கைதிகளின் நிலமை குறித்தும் அவர்களின் தண்டனை காலத்தை குறைத்து விடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். வெனிசுலாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இச்சூழ்நிலையி்ல் வெனிசுலா அரசு முதற்கட்டமாக சிறிய வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us