/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் நகராட்சியில் அமைச்சர் தீவிர பிரசாரம்விழுப்புரம் நகராட்சியில் அமைச்சர் தீவிர பிரசாரம்
விழுப்புரம் நகராட்சியில் அமைச்சர் தீவிர பிரசாரம்
விழுப்புரம் நகராட்சியில் அமைச்சர் தீவிர பிரசாரம்
விழுப்புரம் நகராட்சியில் அமைச்சர் தீவிர பிரசாரம்
ADDED : அக் 10, 2011 02:29 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் அமைச்சர் சண்முகம் தீவிர பிரசாரம் செய்தார்.விழுப்புரத்தில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் சண்முகம் நேற்று காலை கீழ்பெரும்பாக்கம் ரயில்வே பாலத்தில் பிரசாரத்தை துவக்கினார்.
அமைச்சர் சண்முகம் இந்திராநகர், காகுப்பம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக கீழ்பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.சேர்மன் வேட்பாளர் பாஸ்கரன், கவுன்சிலருக்கு போட்டியிடும் பாலசுப்ரமணியன், பூங்கொடி, அழகுநாதன், முத்துலட்சுமி, சிவசங்கரி, மல்லிகா, அபிராமன், ரவிசக்திவேல், சந்திரா உடனிருந்தனர்.மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் அற்புதவேல், தொகுதி செயலாளர் மூர்த்தி, டாக்டர் லட்சுமணன், நகர பொருளாளர் யூசூப், இலக்கிய அணி பாஸ்கரன், மாவட்ட பேரவை இணை செயலர் ரகுநாதன், எம்.ஜி.ஆர்., மன்றம் ஜானகிராமன், முன்னாள் கவுன்சிலர் குருநாதன், பாசறை நிர்வாகிகள் மணிகண்டன், சக்திவேல் உடன் சென்றனர்.


