/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/எம்.ஜி.ஆர்., ஆட்சிதான் பொற்கால ஆட்சி: விஜயகாந்த் பேச்சுஎம்.ஜி.ஆர்., ஆட்சிதான் பொற்கால ஆட்சி: விஜயகாந்த் பேச்சு
எம்.ஜி.ஆர்., ஆட்சிதான் பொற்கால ஆட்சி: விஜயகாந்த் பேச்சு
எம்.ஜி.ஆர்., ஆட்சிதான் பொற்கால ஆட்சி: விஜயகாந்த் பேச்சு
எம்.ஜி.ஆர்., ஆட்சிதான் பொற்கால ஆட்சி: விஜயகாந்த் பேச்சு
திண்டிவனம் : தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலம் தான் பொற்கால ஆட்சி என விஜயகாந்த் பேசினார்.
இரண்டு பேரும் மாற்றி, மாற்றி ஆட்சிக்கு வருவதை, பொற்கால ஆட்சி என்று நான் கூற மாட்டேன். ஒருவர் 2011ல் ராஜ்யசபா சீட் என்று கூட்டணி கட்சியுடன் ஒப்பந்தம் போட்டார். அது என்ன பிளஸ் 1?, நான் சென்ற தேர்தலில் விருத்தாசலத்திலும், இந்த தேர்தலில் ரிஷிவந்தியத்திலும் போட்டியிட்டேன். அது போல் சட்டசபை, லோக்சபா தேர்தலில் நேரடியாக போட்டியிட வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் ஏழை, நடுத்தர மக்களை பார்ப்பதில்லை. இவ்வளவு நாளும் உங்களை ஏமாற்றி வருகின்றனர். திண்டிவனத்தில் இவ்வளவு நாளும் பஸ் ஸ்டாண்ட் வராததற்கு யார் கராணம்? போராடும் நாங்கள் காரணமில்லை. ஓட்டை ஒரு முறை மாற்றி குத்தினால் பயம் வரும். தே.மு.தி.க., தொண்டர்கள் வரும் 19ம் தேதி வரை தூங்க கூடாது. இதுதான் நாம் யார் என்று காட்டும் நேரம். உள்ளாட்சி, இது உங்களாட்சியாகும்.
இதுவரை பதவியில் இருந்தவர்கள் யாரும் எதுவும் செய்யவில்லை. எங்கள் கட்சிக்கு, கட்சிகாரர்கள் ஓட்டு போடுவார்கள். எனக்கு ஓட்டு போடவில்லை என்றாலும், பயப்பட மாட்டேன். என் கட்சியினர் பதவிக்கு வந்து எதுவும் செய்யவில்லை என்றால் தட்டிக் கேட்கலாம். எதிலும், எங்கும் லஞ்சம் என்றால் நாடு எப்படி உருப்படும்? தமிழகத்தில் ஜாதி, மதம், தமிழை வைத்து ஏமாற்றியவர்களின் இன்றைய நிலை என்ன? திண்டிவனத்தில் மேம்பாலம் மட்டுமே உள்ளது. நகரில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பொற்காலம் வராது. தே.மு.தி.க.,விற்கு ஓட்டு போட்டால் சரித்திரம் மாறும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.


