Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாகன சோதனையில் ரூ.5.82 லட்சம் பறிமுதல் : சென்னை நபர்கள் இருவர் கைது

வாகன சோதனையில் ரூ.5.82 லட்சம் பறிமுதல் : சென்னை நபர்கள் இருவர் கைது

வாகன சோதனையில் ரூ.5.82 லட்சம் பறிமுதல் : சென்னை நபர்கள் இருவர் கைது

வாகன சோதனையில் ரூ.5.82 லட்சம் பறிமுதல் : சென்னை நபர்கள் இருவர் கைது

ADDED : அக் 11, 2011 02:02 AM


Google News

விழுப்புரம் : உள்ளாட்சி தேர்தலின்போது வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட மது பாட்டில்கள், 5 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ராதாபுரத்தில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த சைலோ காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, அதில் பிராந்தி பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. காரில் பயணம் செய்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவர்கள் சென்னை தொரப்பாக்கத்தில் அழகு நிலையம் நடத்தி வரும் பன்னீர் செல்வம்,33, மகேஸ்வரன், 39 என தெரிய வந்தது. இருவரும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வட சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் உறவினர்களுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு விநியோகிக்க சென்னையிலிருந்து 552 பித்தளை பூட்டுக்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள், மது பாட்டில்கள் கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 5 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரொக்கப்பணம் தங்கள் நிறுவன பார்ட்னர்களுக்கு சொந்தமானது எனவும், நிர்வாகத்தில் ஒருவார வசூல் பணம் என கூறிய அவர்கள், அதற்கான ரசீதுகளை காண்பித்தனர். இருந்தாலும் போலீசார் ரொக்க பணம், பிராந்தி பாட்டில்கள் , பரிசு பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us