/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை அருகே பஞ்., தேர்தலில் "பண விநியோகம்'? புகார் அளித்த முதியவர் கம்பால் அடித்துக்கொலைநெல்லை அருகே பஞ்., தேர்தலில் "பண விநியோகம்'? புகார் அளித்த முதியவர் கம்பால் அடித்துக்கொலை
நெல்லை அருகே பஞ்., தேர்தலில் "பண விநியோகம்'? புகார் அளித்த முதியவர் கம்பால் அடித்துக்கொலை
நெல்லை அருகே பஞ்., தேர்தலில் "பண விநியோகம்'? புகார் அளித்த முதியவர் கம்பால் அடித்துக்கொலை
நெல்லை அருகே பஞ்., தேர்தலில் "பண விநியோகம்'? புகார் அளித்த முதியவர் கம்பால் அடித்துக்கொலை
திருநெல்வேலி : நெல்லை அருகே பஞ்., தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் அளித்த முதியவர் கம்பால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
எட்டான்குளம் பஞ்., தலைவராக இருப்பவர் செல்வராஜ்(53). இவர் மடத்தூரை சேர்ந்தவர். தற்போது எட்டான்குளம் பஞ்., தலைவர் பதவிக்கு செல்வராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். முத்து கோபாலகிருஷ்ணன் தெருவில் மழைநீர் வாய்க்கால் அமைக்கும்படி முன்பு பஞ்., தலைவர் செல்வராஜிடம் கூறினார். மழைநீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. செல்வராஜ் மீது புகார்மனுக்களை முத்து கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து அனுப்பினார். தற்போது பஞ்., தலைவர் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவாக முத்து கோபாலகிருஷ்ணன் செயல்பட்டார். தேர்தலில் வெற்றி பெற செல்வராஜ் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் அளிப்பதாக அவர் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் உட்பட 6 பேர் முத்து கோபாலகிருஷ்ணனை கம்பு, கற்களால் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக செல்வராஜ், எட்டான்குளத்தை சேர்ந்த சொக்கலிங்கம்(37), கொம்பையா, மாயாண்டி, இசக்கிப்பாண்டி, மாடசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்வராஜ், சொக்கலிங்கம் கைது செய்யப்பட்டனர்.
'தொடரும்' கொலைகள் : நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. பதவிகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. கடந்த இரு நாட்களில் பனவடலிசத்திரம் அருகே பெண் வேட்பாளர் தம்பி, மானூர் அருகே முதியவர் தேர்தல் தகராறில் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தகராறில் விபரீதங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.


