Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விஜயநகர சாய் சமிதியில் 5ம் ஆண்டு துவக்க விழா

விஜயநகர சாய் சமிதியில் 5ம் ஆண்டு துவக்க விழா

விஜயநகர சாய் சமிதியில் 5ம் ஆண்டு துவக்க விழா

விஜயநகர சாய் சமிதியில் 5ம் ஆண்டு துவக்க விழா

UPDATED : ஆக 08, 2011 10:52 AMADDED : ஆக 08, 2011 09:16 AM


Google News
Latest Tamil News

சென்னை: ஸ்ரீ சத்ய சாய் நிறுவனங்களின் கீழ், இயங்கி வரும் வேளச்சேரி, விஜயநகர சத்ய சாய் சேவா சமிதியில், ஐந்தாம் ஆண்டு துவக்க விழாநடந்தது.

பஜனைப் பாடல்கள் மற்றும் மங்கல ஆரத்தியுடன், விழா துவங்கியது. இதில், சாய் சமிதியின் மூத்த உறுப்பினர் வாசுதேவன், 'மனித வாழ்க்கையின் குறிக்கோள்' என்ற தலைப்பில் பேசுகையில், ''மனிதர்கள் உடலைப் பாதுகாப்பதில் மட்டும், அதிகக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், உடலை விட, ஆன்மாவே சிறந்தது. எனவே, மனிதர்கள் ஆன்மாவை நேசிக்க வேண்டும். வாழும்போது, தனக்கென மட்டும் வாழாமல், பிறர்க்கென வாழும் சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பகவானின் கருத்துக்களை, ஒவ்வொரு நாளும் தவறாமல் கடைபிடித்தால், வாழ்க்கை சிறப்பாக அமையும்,' 'என்றார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. சமிதியின் சார்பில், 250 பள்ளிக் குழந்தைகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us