Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் "டல்லடிக்கும்' தீபாவளி வியாபாரம்

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் "டல்லடிக்கும்' தீபாவளி வியாபாரம்

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் "டல்லடிக்கும்' தீபாவளி வியாபாரம்

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் "டல்லடிக்கும்' தீபாவளி வியாபாரம்

ADDED : அக் 11, 2011 10:21 PM


Google News

சிவகங்கை : உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதால் ஓட்டல், ஜவுளி கடைகள், வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்களின்றி தீபாவளி வியாபாரத்தை பார்க்க முடியாமல் சிவகங்கையில் வர்த்தக நிறுவனங்கள் தள்ளாடி வருகிறது.உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினர், சுயேட்சைகள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, பிரசாரத்திற்கு அதிகளவில் ஆட்களை அழைத்து செல்வதில், வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதற்காக, பிரசாரத்திற்கு வரும் ஆண்களுக்கு பிராந்தி, பிரியாணி, பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை தருகின்றனர்.ஊழியர்கள்:நாள் ஒன்றுக்கு சாப்பாடு, கவனிப்பு போக 200 ரூபாய் வரை மிஞ்சுவதால், பிரசார பணியில் தனியார் ஓட்டல், ஜவுளி கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, தீபாவளி பண்டிகைக்கான ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இச்சூழலில், வரும் வாடிக்கையாளர்களை கவர, வர்த்தக நிறுவனங்களில் அதிகளவில் ஊழியர்களை நியமித்திருப்பர். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் பிரசாரத்திற்கு பெரும்பாலான ஊழியர்கள் செல்லும் சூழலில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் இயங்கும் வர்த்தக, ஜவுளி, ஓட்டல்களில் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.தவிப்பு:இதனால், வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர முடியாமல், தவித்து வருகின்றனர். இப்பிரச்னையை போக்க பெரும்பாலான ஜவுளிகடைகளில் வேலைக்கு பெண்கள் தேவை என அதிக இடங்களில் விளம்பரம் செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us