/உள்ளூர் செய்திகள்/சென்னை/தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளைதனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை
ADDED : அக் 07, 2011 12:55 AM
போரூர் : தனியார் நிறுவன மேலாளரின் கிரில் கேட்டை உடைத்த கொள்ளை கும்பல், பீரோவில் இருந்த 35 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 13 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியது.
போரூர் அடுத்த முகலிவாக்கம், அன்னை வேளாங்கண்ணி மூன்றாவது பேசில் வசிப்பவர் மதுசூதனராவ், 49; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி சைலஜா, 45. மைசூரில் தசரா பண்டிகை கொண்டாடுவதற்காக, கடந்த 1ம் தேதி குடும்பத்துடன் மதுசூதனராவ் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய போது, கிரில் கேட், மரக்கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த நிலம் விற்ற 13 லட்சம் ரூபாய், 35 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. பல நாட்கள் வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட கொள்ளை கும்பல், காம்பவுண்டு சுவர் எகிறி குதித்து, மதுசூதனராவின் வீட்டின் கிரில் கதவின் பூட்டு மற்றும் மரக்கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. பூந்தமல்லி உதவி கமிஷனர் முருகேசன், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மோப்பநாய் ராணி வரவழைக்கப்பட்டது. அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி பின் நின்று விட்டது. தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


