/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் காங்., மாநகர, மண்டல தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்புநெல்லையில் காங்., மாநகர, மண்டல தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பு
நெல்லையில் காங்., மாநகர, மண்டல தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பு
நெல்லையில் காங்., மாநகர, மண்டல தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பு
நெல்லையில் காங்., மாநகர, மண்டல தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பு
ADDED : அக் 07, 2011 02:20 AM
திருநெல்வேலி : நெல்லை மாநகர காங்., மேயர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைக்க மாநகர மற்றும் மண்டல தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாநகர காங்.,மேயர் வேட்பாளர் ஜூலியட் பிரேமலா மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக எம்பி.,ராமசுப்பு, மாநகர் மாவட்ட தலைவர் சுந்தரராஜபெருமாள், முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட காங்., பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இத்தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைக்கவும், தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் மாநகர, மண்டல தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர குழுவில் காங்., மாநகர மாவட்ட தலைவர் சுந்தரராஜபெருமாள், பாலன், அபுபக்கர், சிந்தா சுப்பிரமணியன், ராம்நாத், வானுவாமலை, சுத்தமல்லி முருகேசன், சங்கரபாண்டியன், யோபு ஆகிய 9 பேர் கொண்ட பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளன. மண்டல குழுவில் பாளை., மண்டலத்தில் சரவணன் உட்பட 4பேரும், மேலப்பாளையம் முகம்மது அலி உட்பட 3பேரும், தச்சநல்லூர் வேணுகோபால் உட்பட 5பேரும், நெல்லையில் இசக்கி உட்பட 6பேரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மாநகர, மண்டல குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து காங்., பிரமுகர்களின் செல்போன் எண்ணை எந்த நேரத்திலும் காங்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான பிரச்னைகள், வேட்பாளர்களின் பிரசார விவரம் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்., பிரமுகர் தெரிவித்தார்.


