/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு ஊழியர்கள் ஓட்டு உளவுத்துறை குழப்பம்அரசு ஊழியர்கள் ஓட்டு உளவுத்துறை குழப்பம்
அரசு ஊழியர்கள் ஓட்டு உளவுத்துறை குழப்பம்
அரசு ஊழியர்கள் ஓட்டு உளவுத்துறை குழப்பம்
அரசு ஊழியர்கள் ஓட்டு உளவுத்துறை குழப்பம்
ADDED : அக் 07, 2011 10:45 PM
தேனி : அரசு ஊழியர்கள் ஓட்டு யாருக்கு விழும் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உளவுத்துறை குழப்பத்தில் தவிக்கிறது.
அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அரசு ஊழியர்களுக்கு ஆதரவான சலுகைகள் எதையும் அறிவிக்கவில்லை. இது பற்றி இதுவரை அரசு ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாக அதிருப்தி வெளியிடவும் இல்லை. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அரசு ஊழியர்கள் ஓட்டுகள் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு உள்ளது. கம்யூனிஸ்ட்களும் தனித்து போட்டியிடும் நிலையில் அரசு ஊழியர்கள் என்ன முடிவு எடுத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உளவுத்துறை போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.


