/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/"என்.டி.சி' போக்குவரத்து கல்வி கல்லூரி இன்று கோலாகல துவக்கம்"என்.டி.சி' போக்குவரத்து கல்வி கல்லூரி இன்று கோலாகல துவக்கம்
"என்.டி.சி' போக்குவரத்து கல்வி கல்லூரி இன்று கோலாகல துவக்கம்
"என்.டி.சி' போக்குவரத்து கல்வி கல்லூரி இன்று கோலாகல துவக்கம்
"என்.டி.சி' போக்குவரத்து கல்வி கல்லூரி இன்று கோலாகல துவக்கம்
நாமக்கல்: இந்தியாவிலேயே முதன் முறையாக, 'என்.டி.சி' போக்குவரத்து கல்வி கல்லூரி மற்றும் ஓட்டுனர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் அடுத்த கீரம்பூரில் இன்று கோலாகலமாக துவங்குகிறது.
வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், போலீஸ் எஸ்.பி., பிரவேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சம்பத்குமார், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். இக்கல்லூரியின் மூலம் மாணவ, மாணவியருக்கு, 100 சதவீதம் உலகளாவிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மேலும், அறக்கட்டளை சார்பில், ஓட்டுனர் வாரிசுகளுக்கு முன்னுரிமையும், உதவி தொகையுடன் கூடிய கல்வியும் அளிக்கப்படும். மேலும், மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'என்.டி.சி' ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கனரக வாகனங்களின் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம், ஓ.டி.சி. வாகனங்கள் சார்ந்த விபத்து மற்றும் உயிரிழப்பு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பொருளாதார செலவினங்களை குறைத்தல், தொழில்நுட்ப பரிமாற்றம், சமூக பொருளாதார மற்றும் சுற்றுப்புற சூழல் பிரச்னைகளை ஆராய்தல் என, பல்வேறு செயல் முறைகள் மேற்கொள்ளப்படும் என, கல்வி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


