/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/மணல் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் : அதிகாரி துணையுடன் கேரளா சென்ற டாரஸ் லாரிமணல் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் : அதிகாரி துணையுடன் கேரளா சென்ற டாரஸ் லாரி
மணல் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் : அதிகாரி துணையுடன் கேரளா சென்ற டாரஸ் லாரி
மணல் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் : அதிகாரி துணையுடன் கேரளா சென்ற டாரஸ் லாரி
மணல் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் : அதிகாரி துணையுடன் கேரளா சென்ற டாரஸ் லாரி
மார்த்தாண்டம் : கொல்லங்கோடு அருகே செக்போஸ்டில் தடுத்து நிறுத்தப்பட்ட மணல் லாரி போலீஸ் அதிகாரியின் துணையுடன் கேரளாவிற்கு கடத்தப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஒயர்லெஸ்லில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருந்தும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்ற வண்ணம் உள்ளது. இதனையடுத்து அண்மை காலமாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் போலீசாருடன் ஏ.ஆர் மற்றும் கன்ரோல் ரூம் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து செக்போஸ்ட்டுகளும் மாவட்ட போலீஸ் கன்ரோல் ரூம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் குமரி மாவட்டம் வருகை தந்து எல்லையோர செக்போஸ்டுகளை பார்வையிட்டார். அப்போது உணவு மற்றும் மணல் கடத்தல் முழுமையாக தடை செய்யப்படும் எனவும், எல்லையோர செக்போஸ்டுகளில் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில் கொல்லங்கோடு, களியக்காவிளை, அருமனை, பளுகல், களியல் பகுதிகளில் உள்ள சில செக்போஸ்டுகள் வழியாக உள்ளூர் போலீசாரின் ஆதரவுடன் கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்ற வண்ணம் இருந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட செக்போஸ்டுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கொல்லங்கோடு கச்சேரிநடை செக்போஸ்ட்டில் நேற்று காலை மணல் ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று வந்தது. செக்போஸ்ட் போலீசார் ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் மணல் கொண்டு செல்வதற்கான பாஸ் காலாவதியானது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
இது குறித்து செக்போஸ்டில் பணியில் இருந்த போலீசார் ஒயர்லெஸ் மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களில் இருந்த மைக்குகளிலும், போலீசாரிடம் இருந்த வாக்கி டாக்கிகளிலும் ஒரே நேரத்தில் கேட்டது பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.


