ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியபெண் டி.எஸ்.பி., கைது
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியபெண் டி.எஸ்.பி., கைது
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியபெண் டி.எஸ்.பி., கைது
UPDATED : ஜூலை 25, 2011 08:38 PM
ADDED : ஜூலை 25, 2011 08:18 PM
சண்டிகார்:பஞ்சாப் மாநிலத்தில், ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் டி.எஸ்.பி.,யை, சி.பி.ஐ., அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
இவரது வீட்டிலிருந்து, ஒரு கோடி ரூபாயும், கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ராகா கெர்ரா. இவரது கணவர் போலீஸ் பணியின் போது இறந்ததால், கருணை அடிப்படையில் இவருக்கு போலீஸ் துறையில் வேலை கொடுக்கப்பட்டது. தற்போது, சண்டிகாரில் டி.எஸ்.பி., அந்தஸ்தில் இருக்கும் ராகா, முலன்பூர் பகுதியில் கட்டுமானத் துறையை சேர்ந்தவரிடம், ஒரு லட்சம் ரூபாய், லஞ்சம் வாங்கிய போது, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர், கையும் களவுமாக பிடித்தனர். இவரது வீட்டில் நடந்த அதிரடி சோதனையில், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் ரொக்கமும், கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சொத்து விவரங்கள் குறித்து, ராகா முறையாக பதில் கூறவில்லை. நிலத்தை விற்ற பணம் வீட்டில் இருந்ததாக கூறினார். ஆனால் அதற்குரிய ஆவணங்களை அவர் காட்டவில்லை.தற்போது சி.பி.ஐ., காவலில் உள்ள ராகாவை, விசாரணைக்காக ஒரு வார காலம் தங்களிடம் ஒப்படைக்கும் படி, மாநில போலீசார் கோர்ட்டில் கோரியுள்ளனர்.


