ஆனந்தன் ஜாமின் மனு டிஸ்மிஸ் ஆக., 9ம் தேதி வரை காவல்
ஆனந்தன் ஜாமின் மனு டிஸ்மிஸ் ஆக., 9ம் தேதி வரை காவல்
ஆனந்தன் ஜாமின் மனு டிஸ்மிஸ் ஆக., 9ம் தேதி வரை காவல்
ADDED : ஜூலை 27, 2011 02:08 AM
கோவை : நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஆனந்தனை, ஆக., 9ம் தேதி வரை காவலில் வைக்க, கோர்ட் உத்தரவிட்டது.
இவரது ஜாமின் மனுவை, மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவை மாவட்ட தி.மு.க., துணை செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருமான ஆனந்தன் மீது, ஐந்து நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. துவக்கத்தில், ஆர்.எஸ்.புரம் ஸ்ரீசர்மா, ஆர்த்தோ டாக்டர் வேலாசாமி ரவீந்திரனின் புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, வெளிநாட்டு மதுபான விற்பனை வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்குகளில் கைது செய்யப்பட்டு, நேற்று ஜே.எம்.எண்: 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆக., 9ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி உத்தரவிட்டார். ஜாமின் மனு டிஸ்மிஸ்: மாஜிஸ்திரேட் கோர்ட்களில், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த வாரம், மாவட்ட நீதிமன்றத்தில் ஆனந்தன் சார்பில், ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.