Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொடர் போராட்டங்கள் நடத்த சிறு சேமிப்பு முகவர்கள் முடிவு

தொடர் போராட்டங்கள் நடத்த சிறு சேமிப்பு முகவர்கள் முடிவு

தொடர் போராட்டங்கள் நடத்த சிறு சேமிப்பு முகவர்கள் முடிவு

தொடர் போராட்டங்கள் நடத்த சிறு சேமிப்பு முகவர்கள் முடிவு

ADDED : ஜூலை 28, 2011 09:15 PM


Google News
திருப்பூர் : சிறுசேமிப்பு முகவர்களின் கமிஷனை குறைக்கும் வகையிலான, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் தலைமையிலான கமிட்டி பரிந்துரையை எதிர்த்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா போராட்டங்களில் ஈடுபட சிறுசேமிப்பு முகவர்கள் முடிவு செய்துள்ளனர்.திருப்பூர் சிறுசேமிப்பு முகவர்கள் சங்க செயலாளர் கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் நிதி அமைச்சகம் சார்பில் ஓராண்டுக்கு முன், அஞ்சலக சிறுசேமிப்பு முதலீட்டு திட்டங்களை மறு சீராய்வு செய்து மாற்றங்களை கொண்டு வர, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

அக்கமிட்டி, கடந்த ஜூன் மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், சிறுசேமிப்பு முகவர்களின் கமிஷன் சதவீதத்தை குறைக்க பரிந்துரை செய்துள்ளது. இது, இந்தியா முழுவதும் உள்ள ஐந்து லட்சம் சிறுசேமிப்பு முகவர்களின் வாழ்வை பாதிக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் கடந்த 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை, ஆறு நாள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டனர்.திருப்பூர் அஞ்சலக கோட்டத்தை சேர்ந்த முகவர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக மாதாந்திர 'ரெக்கரிங் டெபாசிட்' திட்டத்தில் 60 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்படும். வேலை நிறுத்தத்தின்போது, 25 லட்சம் ரூபாய் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாதாந்திர வருவாய் திட்டத்தில், 35 லட்சத்துக்கு பதில், 10 லட்சமும்; இரட்டிப்பு தொகை வழங்கப்படும் 'கிஸான் விகாஸ்' திட்டத்தில், 10 லட்சத்துக்கு பதிலாக ஐந்து லட்சமும்; தேசிய சேமிப்பு சர்ட்டிபிகேட் திட்டத்தில் 10 லட்சத்துக்கு பதில் இரண்டு லட்சமும்; 'பிராவிடன்ட் பண்ட்' திட்டத்தில், எட்டு லட்சத்துக்கு பதில், 1.5 லட்சம் மட்டுமே முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், முகவர்களே அதிக தொகை திரட்டி முதலீடு செய்வது தெரியவந்துள்ளது. மேலும், கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்து, ஆக., முதல் வாரத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்பட உள்ளது. இதற்கும் முகவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us