Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அன்னூர் பை-பாஸ் இடம்; விரைவில் அறிவிப்பு

அன்னூர் பை-பாஸ் இடம்; விரைவில் அறிவிப்பு

அன்னூர் பை-பாஸ் இடம்; விரைவில் அறிவிப்பு

அன்னூர் பை-பாஸ் இடம்; விரைவில் அறிவிப்பு

ADDED : ஜூலை 29, 2011 01:03 AM


Google News
அன்னூர் : அன்னூர், கோவில்பாளையத்தில் பை-பாஸ் சாலை அமையும் இடம், ஒரு மாதத்தில் தெரிவிக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

திண்டுக்கல்-கோவை-அன்னூர்-சத்தி வழியாக பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி அடுத்த ஆண்டு துவங்கும் என ஆணையம் அறிவித்துள்ளது. சரவணம்பட்டியில் இருந்து அன்னூர் வரை நான்கு வழிப்பாதையாகவும், அன்னூரிலிருந்து புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடக மாநில எல்லை வரை இருவழிப்பாதையாகயும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி கூறியதாவது: கோவில்பாளையத்தில் மருத்துவமனை அருகே ரோட்டின் மேற்கு பகுதியில் மூன்று இடங்களும், கிழக்கு பகுதியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அன்னூரில் கே.ஜி.பள்ளிக்கு முன்னதாகவும், வேறு மூன்று இடங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கென உள்ள தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். பை-பாஸ் துவங்கும் இடம் முடிவு செய்யப்பட்டு பொதுமக்களுடனான ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் நடத்தப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us