/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மணப்பாடு பள்ளியில் மாணவர் மன்றம் துவக்க விழாமணப்பாடு பள்ளியில் மாணவர் மன்றம் துவக்க விழா
மணப்பாடு பள்ளியில் மாணவர் மன்றம் துவக்க விழா
மணப்பாடு பள்ளியில் மாணவர் மன்றம் துவக்க விழா
மணப்பாடு பள்ளியில் மாணவர் மன்றம் துவக்க விழா
ADDED : ஆக 03, 2011 12:08 AM
உடன்குடி : மணப்பாடு பள்ளியில் அனைத்து மன்றங்களின் துவக்கவிழா நடந்தது.
மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் வீரமாமுனிவர் தமிழ் இலக்கிய மன்றம், மறைக்கல்வி மன்றம், அறிவியல் மன்றம் ஆகியவற்றின் துவக்க விழா நடந்தது. புனித யாகப்பர் ஆலயத்தின் துணைப் பங்கு தந்தை கிளைட்டன் தலைமை வகித்தார். இறைவணக்கம் பாடல் நற்செய்தி வாசகத்துடன் விழா துவங்கியது. தமிழ் மன்ற பொறுப்பாசிரியை சசிகலா வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் மனோகர் சாமுவேல்ராஜ் பேசினார். பாடல் போட்டியில் பரிசு பெற்ற மாணவர் ஜெனிபர், பெர்னாட்ஷா பாடல்களைப் பாடினர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி பெனடிக்டா, மாணவர் பிரகாஷ் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்தினர். நடனப் போட்டியில் வென்ற சிசில்டா மற்றும் ரெக்ஸ்லின் குழுவினர் நடன நிகழ்ச்சி நடத்தினர். பேச்சு போட்டி, நடனம், பாடல், வினாடி வினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற 37 பேருக்கு பரிசுகள் வழங்கினர். துணை பங்குதந்தை கிளைட்டன் பேசினார். ஏற்பாடுகளை சசிகலா, கிறிஸ்டினா, ஜீவன், மைக்கிள் ஆகியோர் செய்திருந்தனர்.