/உள்ளூர் செய்திகள்/சென்னை/"கிரேட்டர் சென்னை' மேம்பாட்டுக்கு நிதி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?"கிரேட்டர் சென்னை' மேம்பாட்டுக்கு நிதி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
"கிரேட்டர் சென்னை' மேம்பாட்டுக்கு நிதி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
"கிரேட்டர் சென்னை' மேம்பாட்டுக்கு நிதி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
"கிரேட்டர் சென்னை' மேம்பாட்டுக்கு நிதி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
சென்னை : 'கிரேட்டர் சென்னை'யில் இணைக்கப்படும் 42 உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 3,800 கோடி ரூபாய் நிதியுதவி கேட்டு மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள திட்டத்துக்கு, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அனுமதி வழங்கப்படுமென எதிர்பார்க்கிறது.
புதிய பகுதிகள் இணைக்கப்படுவதன் மூலம், மாநகராட்சியின் 155 வார்டுகள் மறுசீரமைக்கப்பட்டு, புதிய பகுதிகளுடன் சேர்த்து 200 வார்டுகளாக உருவாக்கப்படுகின்றன. புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்து, 3,800 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக, புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தனியார் கட்டடங்கள், சாலை போன்ற புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதற்கேற்ப திட்ட மதிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது.
புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளுக்கு மாநகராட்சி நிதியிலிருந்து உடனடியாக திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்பதாலும், கூடுதல் நிதியை மாநகராட்சி திரட்டுவதில் கால தாமதம் ஏற்படும் என்பதாலும், அரசின் உதவியை மாநகராட்சி நாடுகிறது. எனவே, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், மாநகராட்சி அளித்துள்ள 3,800 கோடி ரூபாய் திட்ட மதிப்புக்கு அனுமதி வழங்கி, ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


