/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்
மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்
மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்
மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்
ADDED : ஆக 11, 2011 03:49 AM
ராசிபுரம் : ''மாணவர்கள், செயல், ஆர்வம், நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும்,'' என, இன்போடெக் முதன்மை நிர்வாக அதிகாரி பேசினார்.ராசிபுரம், ஞானமணி கல்லூரி வணிக மேலாண் துறை சார்பில், 'கிராண்ட் இன்டஸ்ட்ரியல் மெட்லே' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
கல்வி நிறுவனத் தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன், நிர்வாக அதிகாரி பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மாலாலீனா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.கருத்தரங்கில், ஈரோடு யு.ஆர்.சி., இன்போடெக் நிறுவன முதன்மை நிர்வாக அலுவலர் பத்மநாபன் கலந்துகொண்டு பேசியதாவது:மாணவர்கள் படித்து முடித்தவுடன், ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பணிக்கு செல்வதையே விரும்புகின்றனர். மேலும், மாறிவரும் இன்றைய சூழ்நிலையில், எந்த வேலையாக இருந்தாலும் அதை மிகவும் நேசிக்க வேண்டும்.இன்று, பெரிய நிறுவனங்களாக உருவெடுத்தவை ஒரு காலக்கட்டத்தில் சிறிய நிறுவனமாகத்தான் இருந்தது. மக்களிடையே ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை இங்கு அமைத்துள்ளனர்.நாட்டுக்கு நாடு தனிநபர் வருமானம் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு கொண்டுள்ளது. வருங்காலத்தில் மாணவர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கான சூழல் இன்றைய காலக்கட்டத்தில் நிலவி வருகிறது. மாணவர்கள் செயல், ஆர்வம், நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.கல்லூரி மாணவ, மாணவியர் ஆண்டு தோறும் ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு சென்று, அந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் வகைகள், அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, ரமணி ஹூண்டாய் நிறுவனம், சேலம், சக்தி ட்ரு சாய் ஒர்க்ஸ், நாமக்கல் எஸ்.கே.எஸ்., ஆட்டோ மொபைல்ஸ், கேசி பால் உற்பத்தியாளர் நிறுவனம், நியூ இன்டியா அசுரன்ஸ், ராசிபுரம் கிரேட் இன்போடெக் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனத்தின் வளர்ச்சி, தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிறைவு விழாவில், சென்னை லீட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜான், மகேந்திரா சத்யம்ஸ் நிறுவன தரமிடுதல் துறை உதவி துணை தலைவர் கண்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், கல்லூரி மேலாண் துறைத் தலைவர் சுரேஷ்குமார், நிர்வாக அதிகாரிகள், முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


