/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பாபநாசத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்பாபநாசத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்
பாபநாசத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்
பாபநாசத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்
பாபநாசத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்
ADDED : ஆக 16, 2011 02:00 AM
பாபநாசம்: பாபநாசம் பாரத் தொழிற்பள்ளியில் 65வது சுதந்திர தினவிழா, பாபநாசம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தினகரன் தலைமையில் நடந்தது.
விழாவில் பாரத் ஐ.டி.ஐ., தாளாளர் சவுரிராஜன் வரவேற்றார். லயன்ஸ் சங்க பொருளாளர் ரஜனி விஜயகுமார் முன்னிலை வகித்தார். விழாவில், லயனஸ் சங்க தலைவி கல்யாணி பழனியப்பன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தும் மாணவர்களுக்கு லயனஸ் சங்கங்களின் சார்பாக ஜாமின்ட்ரி பாக்ஸ் வழங்கி பேசினார்.விழாவில், நல்லாசிரியர் கலைசெல்வன், முன்னாள் கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் முகமது பாட்சா உலக திருக்குறள் மைய பொறுப்பாளர் சின்னதுரை, லயனஸ் சங்க நிர்வாகிகள், கல்பனா, சுதா ஆகியோர் சுதந்திர தினம் பற்றி பேசினர். ஐ.டி.ஐ., வளாகத்தில் மாவட்ட லயனஸ் கவுன்சில் பொருளாளர் தில்லைநாயகி, மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜோசப் க்ளமெண்ட், சங்கர் கணேஷ் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். பாரத் ஐ.டி.ஐ., மேலாளர் கிருஷ்ணசுவாமி நன்றி கூறினார்.* பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவில், ரோட்டரி தலைவர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றிவைத்து பேசினார். விழாவில் ரோட்டரி செயலாளர் விவேகானந்தன், நிர்வாகிகள் ஜெயசேகர், அமீர்ஜான், கோவிந்தராஜ், சேவியர், ராஜேந்திரன், கரிகாலன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* பாபநாசம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் எம்.எல்.ஏ., துரைக்கண்ணு தேசிய கொடியை ஏற்றிவைத்து, சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பற்றி பேசினார். விழாவில் அதிமுக அவைதலைவர் நடராஜன், ராஜேந்திரன், கண்ணன், மருதையன், சின்னையன், சுரேஷ், அய்யாசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


