/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கிராமங்களில் மின் கட்டணம் வசூலிக்கபிரிண்டருடன் கூடிய கையடக்க மிஷன் அறிமுகம்கிராமங்களில் மின் கட்டணம் வசூலிக்கபிரிண்டருடன் கூடிய கையடக்க மிஷன் அறிமுகம்
கிராமங்களில் மின் கட்டணம் வசூலிக்கபிரிண்டருடன் கூடிய கையடக்க மிஷன் அறிமுகம்
கிராமங்களில் மின் கட்டணம் வசூலிக்கபிரிண்டருடன் கூடிய கையடக்க மிஷன் அறிமுகம்
கிராமங்களில் மின் கட்டணம் வசூலிக்கபிரிண்டருடன் கூடிய கையடக்க மிஷன் அறிமுகம்
ADDED : ஆக 19, 2011 10:45 PM
சிவகாசி:மின் கட்டணம் கட்ட வசதி இல்லாத கிராமங்களில், பிரிண்டருடன் கையடக்க
மெஷின் மூலம் மின் கட்டண ரசீது வழங்கும் முறை அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.மின் வாரிய அலுவலகம் இல்லாத குக் கிராமங்களில் 'கேம்ப்
கலெக்சன்' என மாதத்தில் ஓரிரு நாட்கள் மின் கணக்கீட்டாளர்கள் முகாமிட்டு
அந்த கிராமத்திலேயே மின் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை இருந்தது.
தற்போது
ஆன் லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையால் கேம்ப் கலெக்சன்
நடைமுறை கைவிடப்பட்டது. கிராமங்களில் உள்ளவர்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு
சென்று மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. மின் வாரியம் தற்போது
'ஹேண்ட் ஹெல்டு டிவைஸ்' என்னும் மின் கணக்கீட்டு கையடக்க மெஷினுடன்
பிரிண்டரும் வழங்கியுள்ளது. மின்வாரிய அலுவலகம், ஆன் லைன் வசதி இல்லாத
தபால் நிலையங்கள் உள்ள கிராமங்களில் மின் கணக்கீட்டாளர்கள் கையடக்க மிஷின்
உடன் சென்று வீடுகளில் மின் அளவீடு கணக்கீடு செய்து அதே இடத்தில் மின்
கட்டணத்திற்கான பணம் வசூலித்து அதற்கான ரசீது வழங்கப்படும். இந்த
இயந்திரத்தை சோதனை அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில
கிராமங்களில் நடைமுறைப்படுத்த உள்ளனர். இதனால் கிராம மக்கள் மின் கட்டணம்
செலுத்துவதற்கான வீண் அலைச்சல், போக்குவரத்து செலவு மிச்சம் ஆகும்.


